வாழ்க்கை ஒரு முடிவில்லாத மலைப்பாதை பயணம் மாதிரி, அதுவும் இருட்டுல. ஒவ்வொரு வளைவுகளிலும் என்ன இருக்குன்னு யாருக்கும் தெரியாது. விபத்துக்கள் நேராமல் இருக்கற வரை பயணம் ரொம்ப குதூகலமா தான் இருக்குது. கூட வர்ற பல பேர் ஏதோ ஒரு வளைவுல நம்மகிட்ட இருந்து விலகி போயிடறாஙக. பல புது முகங்கள் அப்பப்போ சேந்து வர்றாங்க. கொஞ்சம் யோசிச்சு பார்த்த இந்த முகங்கள் எனும் அடையாளங்களை தவிர இந்த பயணம் முழுவதும் பார்க்கிற அர்த்தமுள்ள காட்சிகள் எல்லாமே கிட்டதட்ட ஒரே மாதிரி தான் இருக்கு. பிடிக்குதோ இல்லையோ சந்தோசம், பயம், மயக்கம் எல்லாத்தையும் அனுபவிக்கறோம்। எவ்வளவு தூரம் இந்த பயணம்? எதை நோக்கி இவ்வளவு வேகம்? ஒவ்வொருத்தரோட முடிவும் ஏதோ ஒரு திருப்பத்துல காத்துகிட்டு இருக்கு. அது எது.... தெரியல... ஆனா, வளைவுகளையும் தாண்டி பயணம் தொடர்ந்து கிட்டே தான் இருக்கு....